பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு சரிவு
2022-06-20 18:40:50

பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஜுன் 20ஆம் நாள் திங்கள்கிழமை தொடர்ந்து சரிந்து வருகிறது. வங்கிகளிடையேயான பணப் பரிவர்த்தனைச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மாற்று விகிதம் 210-க்கு கீழ் சரிந்துள்ளது. காலை 10:30 மணியளவில்,  திறந்த சந்தையில் ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 221ஆக பதிவாகியுள்ளது.