மோதலில் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கு குட்ரேஸ் வேண்டுகோள்
2022-06-20 10:39:51

ஜுன் 19ஆம் நாள், மோதலில் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும். ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் அன்று நிகழ்த்திய உரையில், மோதலில் பாலியல் வன்முறையைச் சர்வதேசச் சமூகம் முழுமுயற்சியுடன் ஒழிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேசச் சமூகம் உயிர் பிழைப்பவர்களுடன் ஒன்றாக நின்று, மனித நேய நெருக்கடியில் கௌரவம் மற்றும் அமைதியை நாடி வருகின்ற வலுவற்ற மக்களை ஆதரிப்பதற்கு வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.