உலக வளர்ச்சி அறிக்கையின் வெளியீட்டுக் கூட்டத்தில் வாங் யீ பங்கெடுப்பு
2022-06-20 17:23:34

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜுன் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக, உலக வளர்ச்சி அறிக்கையை வெளியிடும் கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், வளர்ச்சி என்பது, மனித சமூகத்தின் நிலையான கருப்பொருளாகவும், முன்னேற்றத்தின் முக்கிய அளவுகோலாகவும் திகழ்கிறது. சீனா மற்றும் உலக நாடுகளின் பயன் தரும் அனுபவங்களின் அடிப்படையில், உலக வளர்ச்சி அறிக்கை, 8 துறைகளில் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கான கொள்கை ரீதியான முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. உலக வளர்ச்சி முன்மொழிவுகளை, சீனா நடைமுறையாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை, இதுவாகும். இவ்வறிக்கை, பன்னாட்டு வளர்ச்சிக்கும் உலக வளர்ச்சி இலட்சியத்துக்கும், அனுபவம் மற்றும் ஆதரவை அளிக்கும் என்று வாங் யீ குறிப்பிட்டார்.