ஆசியாவின் பெரிய தொடர்வண்டி நிலையமான ஃபெங்டய் தொடர்வண்டி நிலையம்
2022-06-20 13:20:36

சுமார் 4 ஆண்டுக்காலச் சீராக்கப் பணிக்கு பிறகு, பெய்ஜிங் மாநகரின் ஃபெங்டய் தொடர்வண்டி நிலையம் ஜுன் 20ஆம் நாள் மீண்டும் சேவைக்கு வந்தது. பெய்ஜிங்கிலுள்ள முதலாவது தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஆசியாவின் மிகப் பெரிய தொடர்வண்டி நிலையமாக மாறியுள்ள இந்நிலையம், கடந்த 100 ஆண்டுகளாக சீனாவின் இருப்புப் பாதையின் வளர்ச்சிப் போக்குச் சான்றாக உள்ளது. கட்டுமானத்தை விரிவாக்கிய பிறகு, சுமார் 4 லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்பியிலான ஃபெங்டய் தொடர்வண்டி நிலையத்தில், நுண்ணறிவுச் சேவை அமைப்புமுறை அமைக்கப்பட்டுள்ளது.