பொய் கூறும் நாட்டின் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்திய கட்டுரை
2022-06-21 10:05:08

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கன் அண்மையில் ஆசிய சங்கத்தில் சீனா மீதான கொள்கை பற்றி உரை நிகழ்த்திய போது, சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து அவதூறு பரப்பினார். இருப்பினும், சீனாவை முழுமையாக முடக்கி தடுக்கும் தனது உள்நோக்கத்தை அமெரிக்கா எவ்வளவு அழகான சொல்களாலும் மூடிமறைக்க முடியவில்லை. சீனா பற்றிய உண்மைகளும் அமெரிக்காவின் தவறான புரிதல் நிலையும் என்ற தலைப்பில் சீன வெளியுறவு அமைச்சகம் 19ஆம் நாளிரவு வெளியிட்ட கட்டுரையில், சீனா மீதான அமெரிக்க கொள்கையின் ஏமாற்றம், போலித்தனம் மற்றும் பாதிப்பு ஆகியவை சான்றுகள் மற்றும் தரவுகளின் மூலம் உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச ஒழுங்கிற்கான பாதிப்பு, கட்டாயத் தூதாண்மை, மனித உரிமைகள் மீறல், உலகளாவிய ஒற்று கேட்டல்(கண்காணிப்பு) ஆகியவற்றுக்கான மூலக் காரணம் அமெரிக்கா தான் என்று சுமார் 40 ஆயிரம் எழுத்துகளில் அமெரிக்காவின் 21 தவறுகள் இக்கட்டுரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

சீனா பற்றி மோசமான பொய்களை உருவாக்கி வரும் அமெரிக்கா, போலியான பலதரப்பு வாதத்தைப் பயன்படுத்தி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் தனது தலைமையிலான வர்த்தக விதிமுறையை உருவாக்க முயன்று வருகிறது. அதன் சுயநலத்தின் அடிப்பையில் உருவாக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, உலகப் பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கும். நெடுநோக்குடன் பார்த்தால், இக்கூட்டமைப்பால், பிரதேசப் பொருளாதார வளர்ச்சி பிளவு நிலையில் சிக்கிக் கொள்ளக் கூடும் என்று அந்நாட்டின் வெளி விவகாரங்கள் எனும் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.