காலஓட்டத்திற்கும் நாட்டின் நடைமுறை நிலைமைகளுக்கும் ஏற்ற மனித உரிமைகள் மேம்பாட்டுப் பாதையில் முன்னேறிச் செல்லும் சீனா
2022-06-21 19:45:56

சீனாவின் மனித உரிமைத் துறையில் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 21ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அறிமுகம் செய்தார்.

மனித உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில், சொந்த நாட்டின் நடைமுறை நிலைமைகள் மற்றும் காலஓட்டத்திற்கு ஏற்ற ஒரு பாதையைத் தேடி அமைத்துக் கொண்டு, சீனா இப்பாதையில் முன்னேறி  சென்று வருகிறது. சீனாவின் மனித உரிமைத் துறை விரைவாக மேம்பட்டு வருவதோடு, உலகின் மனித உரிமைகளின் வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளது. சீனாவில் மனித வளர்ச்சி குறியீட்டு எண், 1990ஆம் ஆண்டில் இருந்த 0.499இல் இருந்து 2019ஆம் ஆண்டில் இருந்த 0.761ஆக உயர்ந்துள்ளது. 1990ஆம் ஆண்டு இந்த குறியீடு அமலுக்கு வந்த பிறகு குறைந்த வளர்ச்சி நிலையில் இருந்து உயர்ந்த வளர்ச்சி நிலைக்கு முன்னேறியுள்ள ஒரேயொரு நாடு, சீனா தான். மேலும் சீனாவின் வறுமை ஒழிப்பு பங்களிப்பு, உலகில் 70 விழுக்காட்டிற்கும் மேலாக வகிக்கிறது என்று வாங் வென்பின் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் மனித உரிமைகளின் நிலைமையை மதிப்பீடு செய்யும்போது, அந்நாட்டு மக்களின் நலன் பேணிக்காத்தல், மக்களுக்கு கிடைக்கும் நன்மை மற்று பாதுகாப்பு உணர்வு ஆகியவை முக்கிய அளவுகோல்களாக விளங்கும். ஹார்வர்டு பல்கலைக்கழம் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய கருத்து கணிப்புகளில், கட்சி மற்றும் அரசாங்கம் மீதான சீன மக்களின் நம்பிக்கை விகிதம் தொர்ச்சியாக 90 விழுக்காட்டுக்கும் மேலாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.