8ஆவது சீன-உலகமயமாக்கல் மன்றம் பெய்ஜிங்கில் துவக்கம்
2022-06-21 17:22:50

8ஆவது சீன-உலகமயமாக்கல் மன்றம் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சர்வதேச சமூகம், கையோடு சவால்களைச் சமாளிப்பதற்கான எதிர்பார்ப்பை,  சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள் பலர் இம்மன்றத்தில் தெரிவித்தனர்.

சீனாவுக்கான தென்னாப்பிரிக்கத் தூதர் சியாபொங்கா சிவீலே, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்குக் கிடைத்த சாதனைகளை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறுகையில், உலகளாவிய சவால்களைச் சமாளிப்பது, பல தரப்புவாதத்துக்கு ஆதரவளிப்பது, மேலும் நியாயமான சர்வதேச வர்த்தகத்தை முன்னெடுப்பது, உலக வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் முதலியவற்றுக்கு, பிரிக்ஸ் நாடுகள் தலைமை பங்கு ஆற்றி வருகின்றன என்று இம்மன்றத்தில் குறிப்பிட்டார்.