கடந்த 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி மேம்பாடு
2022-06-21 16:37:03

நகரப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளிலுள்ள அடிப்படை வசதிகள் ரீதியிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், சீன மத்திய அரசு மொத்தமாக 40 ஆயிரம் கோடி யுவானுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளூர் அரசு 1 இலட்சம் கோடி யுவானுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வதை இது கொண்டுள்ளது என்று சீன கல்வி அமைச்சகம் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.  

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, கட்டாய கல்விக்கான அடிப்படை வசதிகள் தெளிவாக மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய மற்றும் மேற்கு பிரதேசங்களின் கிராமப்புறங்களில் பள்ளி இயங்கும் நிலைமைகள் ஒரு தரமான பாய்ச்சலை எட்டியுள்ளன. "சிறந்த மற்றும் மிக பாதுகாப்பான கட்டிடங்கள் பள்ளிகளில் உள்ளன" என்று பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.