முதல் ஐந்து மாதங்களில் பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தகம் அதிகரிப்பு
2022-06-21 14:11:01

இவ்வாண்டில், இதர பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் பயனுள்ள ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. முதல் 5 மாதங்களில், மற்ற பிரிக்ஸ் நாடுகளுக்கு சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை ஒரு இட்சத்து 31ஆயிரம் கோடி யுவான் ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12.1விழுக்காடு அதிகம். அதேபோல் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் ஒட்டுமொத்த அதிகரிப்பு வேகத்தை விட இது 3.8விழுக்காடு அதிகம்.

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு விரிவான முறையில் வளர்ந்து வருவதுடன், சீனா மற்றும் இதர பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்ந்து அதிகரிக்க சாத்தியம் அதிகம்.