ஆதிகுடிகளின் உரிமையை மீறும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா
2022-06-21 09:55:39

ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 50ஆவது கூட்டத்தின்போது ஜுன் 20ஆம் நாள் நடைபெற்ற சிறப்பு அறிக்கையாளரின் பேச்சுவார்த்தையில் சீன பிரதிநிதி உரை நிகழ்த்தினார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வரும் ஆதிகுடி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்ட விவகாரத்தில் ஐ.நா மனித உரிமை அமைப்பு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

நீண்டகாலமாக,  அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இன ஒழிப்பு, நாகரிக ஒழிப்பு ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. இப்போதும்கூட இந்த நாடுகளில் மிகக் கடுமையான இனவெறி பாகுபாடு நிலவுகிறது.

இந்த நாடுகளில் வாழும் ஆதிகுடி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அடக்குமுறைகளையும் பாகுபாடுகளையும் எதிர் கொள்கின்றனர். மேற்கூறிய நாடுகள், வரலாற்று குற்றங்களையும் தற்போதைய பிரச்சினைகளையும் நேரடியாக பார்த்து, அடக்குமுறை மற்றும் பாகுபாட்டு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று சீனப் பிரதிநிதி வேண்டுகோள் விடுத்தார்.