பிரிட்டனில் பணவீக்க விகிதம் உயர்வு
2022-06-22 18:16:06

பிரிட்டன் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரலில் எரியாற்றல் விலை முன்பு கண்டிராத அளவில் உயர்ந்ததால், மே திங்கள் பணவீக்க விகிதம் 9.1 விழுக்காடாக உய்ர்ந்து, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் கூறுகையில், பணவீக்க விகிதத்தைக் குறைத்து, உயர்ந்து வரும் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.