2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு ஒருங்கிணைப்பாளர்களின் 3வது கூட்டம்
2022-06-22 10:23:29

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு ஒருங்கிணைப்பாளர்களின் 3வது கூட்டத்துக்கு பிரிக்ஸ் விவகாரத்துக்கான சீன ஒருங்கிணைப்பாளரும், சீன வெளியுறவுத் துணை அமைச்சருமான மா சாவ்ஷு ஜுன் 21ஆம் நாள் தலைமைத் தாங்கினார். ரஷியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.

மா சாவ்ஷு கூறுகையில், தற்போது சீனாவில் பல்வேறு ஆயத்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு வெற்றிப் பெற்று, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளை மேலும் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றுவது உறுதி என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.