5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் 260 முன்நிலை நிறுவனங்கள் பங்கெடுப்பு
2022-06-22 09:54:01

5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சிக்கான ஆயத்தம் பற்றிய கூட்டம் மற்றும் கையொப்பமிடும் விழா ஜுன் 21ஆம் நாள் நடைபெற்றது. தற்போது இப்பொருட்காட்சிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன. தொழில் நிறுவனங்கள் கையொப்பமிட்ட காட்சியிடங்களின் பரப்பளவு, திட்டமிடப்பட்ட பரப்பளவில் 76 விழுக்காடு வகிக்கிறது. உலகம் மற்றும் தொழில்களின் முன்னிலையிலுள்ள 260 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுப்பதை உறுதி செய்துள்ளன என்று தெரிய வந்துள்ளது.

சீன வணிக அமைச்சகத்தின் துணைத் தலைவர் ஷெங் ஜியூபிங் இணையவழி நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில், சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் வளர்ச்சிப் போக்கு, புதிய யுகத்தில் சீனா திறப்பை விரிவாக்குவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும், பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு கூட்டு வெற்றி பெறுவதற்கான முக்கியச் சான்றாகவும் திகழ்கிறது என்று தெரிவித்தார்.