அமெரிக்காவுக்கு சிக்கல்களைக் கொண்டு வரும் “பொய் கூற்று மசோதா”
2022-06-22 11:06:32

அமெரிக்காவில் உய்கூர் கட்டாய உழைப்பு தடுப்பு மசோதா ஜுன் 21ஆம் நாள் அமலுக்கு வந்தது. பொய்களை மட்டுமே கொண்ட இம்மசோதாவில், கட்டாய உழைப்புடன் தொடர்பு இல்லாத தெளிந்த சான்றுகள் கிடைக்கும் வரை சீனாவின் சின்ஜியாங்கிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இது, சின்ஜியாங்கின் மனித உரிமை நிலைமையை அமெரிக்கா கறைப்படுத்தி, மனித உரிமையை ஆயுதமாக்கும் புதிய செயலாகும். சின்ஜியாங்கின் பருத்தி, தக்காளிப்பழம், சூரிய ஆற்றல் ஒளிவோல்ட்டா உள்ளிட்ட தொழில்களை அடக்கி, சீனாவின் வளர்ச்சியைத் தடுப்பது அதன் நோக்கமாகும். ஆனால் தனது தடை நடவடிக்கைகளுக்கு இறுதியில் அமெரிக்காவே விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

சின்ஜியாங்கின் பருத்தி உற்பத்தியைப் பார்த்தால், அங்குள்ள பெரும்பாலான பருத்தி விதைப்பில் இயந்திர மயமாக்க அளவு 90 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது. சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு என்பதே, சீனாவுக்கு எதிரான சக்திகள் உருவாக்கிய மோசமான பொய் கூற்று.

அமெரிக்காவின் இம்மசோதா அமலாக்கப்பட்ட பிறகு, சர்வதேச வர்த்தக ஒழுங்கை குழப்பமாக்கி, உலகத் தொழில் மற்றும் வினியோக சங்கிலிகளின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும். இதனால் சின்ஜியாங்கின் சில நிறுவனங்கள் பாதிப்படையக் கூடும். இருப்பினும், பொருளாதாரத் துறையில் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திறப்புக் கொள்கையைப் பின்பற்றும் சின்ஜியாங்கின் வெளிநாட்டு வர்த்தகம் இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் 30.9 விழுக்காடு அதிகரிப்புடன், 6741 கோடி யுவான் மதிப்பைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.