உக்ரைன் தானிய ஏற்றுமதி பற்றிய பேச்சுவார்த்தை
2022-06-22 09:58:17

உக்ரைனின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான கருங்கடல் இடைவழியை உருவாக்குவது பற்றி ஐ.நா. முன்னெடுத்த 4 தரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற உள்ளது. இதில், துருக்கி, உக்ரைன், ரஷியா, ஐ.நா ஆகிய 4 தரப்புகள் கலந்து கொள்ளவுள்ளன என்று துருக்கி செய்தி தொலைக்காட்சி நிலையம் 21ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

இந்த இடைவழி உருவாக்கத் திட்டம் குறித்து துருக்கி ராணுவப் பிரதிநிதிகள் ரஷியாவுடன் விவாதிக்க உள்ளனர். ஒரு மாதத்துக்குள் இந்த இடைவழி சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.