காலத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க பாடுபடும் சீனா
2022-06-23 20:27:15

உலகம் எங்கே செல்கிறது?அமைதி அல்லது போர்? வளர்ச்சி அல்லது வீழ்ச்சி, திறப்பு அல்லது முடக்கம்?ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்பு? ஆகியவை போன்ற கேள்விகள் எழுந்துள்ளன என்று ஜுன் 22ஆம் நாளிரவு பிரிக்ஸ் வணிக மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உலக அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையைக் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும்.  ஒன்றுக்கு ஒன்று உதவி வழங்கி, உலகின் நிலையான வளர்ச்சியைக் கூட்டாக மேம்படுத்த வேண்டும். கூட்டு முயற்சி எடுத்து, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றியை கூட்டாக அடைய வேண்டும்.  திறப்பு மற்றும் ஒன்றிணைப்பை கூட்டாக விரிவாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் முன்வைத்த 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

வளர்ச்சி, அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான முக்கிய திறவுகோலாகும். இதுவும் இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருளாகும். பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு, பலதரப்புவாதத்தின் வெற்றி. உலகளாவிய வளர்ச்சிச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதில் சீனாவின் முயற்சிகளை இது காட்டுகின்றது. பல்வேறு நாடுகள் ஒற்றுமையுடன் பாடுபட்டு, பிரிக்ஸ் ஒத்துழைப்பு உயர்தர வளர்ச்சியை அடைவது மட்டுமல்லாமல், உலக அமைதி மற்றும் வளர்ச்சியும் அதிக நேர்மறையான ஆற்றலைப் பெறும் என்பது உறுதி.