அன்னிய முதலீட்டை ஈர்த்து வரும் சீனா
2022-06-23 17:15:18

இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை, சீனாவில் உள்ளபடியே அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டுத் தொகை, 56 ஆயிரத்து 420 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.3 விழுக்காடு அதிகரித்தது. முந்தைய தரவுகளுடன் ஒப்பிட்டால், இதன் அதிகரிப்பு வேகம் உயர் நிலையில் உள்ளது. சீனா, அன்னிய முதலீட்டை ஈர்க்கும் போக்கும் நிலையாக இருக்கிறது என்று வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் சிக்கல்களை எதிர்நோக்கிய போதிலும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பல, நீண்டகாலமாக சீனாவில் முதலீட்டுக்கான வளர்ச்சி எதிர்காலத்தின் மீது பேரார்வம் காட்டுகின்றன. அண்மையில் வெளிநாட்டு வணிகச் சங்கத்தின் தரவுகள்படி, பெரும்பாலான பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், சீனாவை முதன்மை சந்தையாகக் கருதுகின்றன. எதிர்காலத்தில் மேலும் அதிகமான நிறுவனங்கள், சீனச் சந்தைக்குள் நுழையவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.