அமெரிக்க மனித உரிமை பிரச்சினை குறித்து சீனாவின் கவனம்
2022-06-23 14:35:11

அமெரிக்கா, சட்டவிரோத மரண தண்டனை பிரச்சினையில் சீனா கவனம் செலுத்துகின்றது என்று ஐ.நா மனித உரிமை கவுன்சில் 50ஆவது கூட்டத்தில் சட்டவிரோத மரண தண்டனை விவகாரத்துக்கான சிறப்பு அதிகாரியுடன் பேசிய சீன பிரதிநிதி தெரிவித்தார்.

அமெரிக்க காவற்துறையினர்கள், வன்முறை சட்ட அமலாக்கத்தினால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவ வீரர்கள், வெளிநாட்டு ராணுவ நடவடிக்கைகளில் ஆயுதமில்லாத பொது மக்களைக் கொன்றனர். ஐ.நா மனித உரிமை கவுன்சில் இந்தச் சம்பவங்களில் கவனம் செலுத்தி, பன்முகங்களிலும் நேர்மையாகவும் புலனாய்வு செய்ய வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் சீன பிரதிநிதி தெரிவித்தார்.