ரஷிய எரிவாயு வினியோக நிறுத்தத்திற்கு ஆயத்தம் செய்யும் ஐரோப்பா
2022-06-23 14:29:06

2022ஆம் ஆண்டு உலக எரியாற்றல் முதலீட்டு அறிக்கையை சர்வதேச எரியாற்றல் முகமையகம் 22ஆம் நாள் வெளியிட்டது. 2022ஆம் ஆண்டில் உலக எரியாற்றல் முதலீடு 8 விழுக்காடாக அதிகரிக்க சாத்தியம் இருக்கிறது. ஆனால், தற்போதைய எரியாற்றல் மற்றும் காலநிலை நெருக்கடியை முதலீடு அதிகரிப்பு சமாளிக்க முடியாது என்று இவ்வறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டது.

ஐரோப்பியாவுக்கான எரிவாயு வினியோகம் முழுமையாக நிறுத்துவதனால் ஏற்படும் எரியாற்றல் நெருக்கடியை சமாளிக்க, ஐரோப்பா ஆயத்தம் செய்ய வேண்டும் என்று இம்முகமையகத்தின் தலைவர் பிரோல் தெரிவித்தார்.

ஐரோப்பியாவின் பல்வேறு நாடுகள், எரிவாயு சேமிப்பை அதிகரிக்க வேண்டும். அணு மின் நிலையங்களை நிறுத்துவதை ஒத்தி வைப்பது, நிலக்கரி மின் நிலையங்களை மீண்டும் இயக்குவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.