ஜோ பைடனுக்கான ஆதரவு விகிதம் சரிவு
2022-06-23 11:20:03

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுக்கான பொது மக்களின் ஆதரவு விகிதம் தொடர்ந்து 4 வாரங்களாக வீழ்ச்சி அடைந்து 36சதவீதமாக குறைந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் சோப் குழுமமும் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில் பொருளாதாரப் பிரச்சினை, தற்போது அமெரிக்கா எதிர்கொள்கின்ற மிக முக்கியமான பிரச்சினையாகும் என்று பொரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

தற்போது அமெரிக்காவில் ஏற்பட்ட பண வீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளதால், பைடனுக்கான ஆதரவும் பாதிக்கப்பட்டு வருகின்றது என்று ஆராய்ந்து தெரிவிக்கப்பட்டது.