தரவுகள் பாதுகாப்புப் பணியை வலுப்படுத்த வேண்டும்:சீன அரசுத் தலைவர் உரை
2022-06-23 14:36:35

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பன்முகச் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் ஆணையத்தின் 26ஆவது கூட்டத்துக்கு ஜுன் 22ஆம் நாள் பிற்பகல் தலைமை தாங்கிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், தரவுகள் அடிப்படை அமைப்புமுறையின் ஆக்கப்பணி, நாட்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய தரவுகளின் பாதுகாப்பைப் பேணிக்காத்து, தனிநபர் தகவல்கள் மற்றும் வணிக தரவுகளின் பாதுகாப்புக்கு உத்தரவு அளிக்க வேண்டும் என்றும், நிர்வாகப் பிரதேசங்களை வரைந்து உருவாக்கும் பணிக்கு கட்சி மத்திய கமிட்டி தலைமைத் தாங்குவதை வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.