2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழில் மற்றும் வணிக மன்றக்கூட்டம்
2022-06-23 09:56:38

சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன கவுன்சில் ஏற்பாடு செய்த 2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுத் தொழில் மற்றும் வணிக மன்றக்கூட்டம் ஜுன் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. “பிரிக்ஸ் தொழில் மற்றும் வணிகக் கூட்டாளி உறவை ஆழமாக்கி, உலக வளர்ச்சியின் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவது” என்பது, நடப்பு மன்றக்கூட்டத்தின் கருப்பொருளாகும்.

உலகப் பொருளாதார மீட்சி, பசுமை வளர்ச்சி முறை மாற்றம், எண்ணியல் பொருளாதார வளர்ச்சி, சுகாதார மற்றும் ஆரோக்கிய ஒத்துழைப்பை விரிவாக்குவது, தொழில் மற்றும் வினியோகச் சங்கிலியின் உறுதி தன்மையை வலுப்படுத்துவது உள்ளிட்ட 5 விவகாரங்கள் இம்மன்றக்கூட்டத்தில் முக்கியமாக விவாதம் செய்யப்பட்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்கள், சீனாவுக்கான தூதர்கள், தொழில் மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் நேரடியாகவும் இணைய வழியாகவும் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.

மேலும், பிரிக்ஸ் நாட்டுத் தொழில் மற்றும் வணிகத் துறைகளின் பெய்ஜிங் முன்மொழிவை, இக்கூட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு தரப்புகள் கூட்டாக வெளியிட்டன.