உலகத் தொழில் சங்கிலியிலிருந்து தன்னைத் தானே விலக்கும் அமெரிக்கா
2022-06-23 17:25:32

அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு பணியகம், உய்கூர் கட்டாய உழைப்பு தடுப்பு மசோதாவின்படி, சீனாவின் சின்ஜியாங்கில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கட்டாய உழைப்புடன் தொடர்புடையவை என ஊகம் செய்து, சின்ஜியாங்குடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. பொய்களின் அடிப்படையில் அமெரிக்கா மேற்கொண்ட இத்தகைய வெறித்தனமான செயல், சந்தைப் பொருளாதார ஒழுங்கை மீறியுள்ளது. வர்த்தகத்தில் சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து, சின்ஜியாங்கை, ஏன் முழு சீனாவையும் கூட, உலகத் தொழில் சங்கிலியிலிருந்து விலக்கி, சின்ஜியாங்கின் மூலம் சீனாவைத் தடுப்பதற்கான நோக்கத்தை நனவாக்க அமெரிக்கா முயன்று வருகிறது.

சின்ஜியாங்கிற்கு அமெரிக்கச் சந்தை இழப்பது, காட்டில் ஒரு மரம் இழப்பது போன்றது. ஆனால் உலகளவில் மிகப் பெரிய நுகர்வுச் சந்தையான அமெரிக்காவைப் பொருத்தவரை, சின்ஜியாங்குடன் தொடர்புடைய அனைத்து பொருட்களையும் மறுத்தால், உலகத் தொழில் சங்கிலியிலிருந்து தன்னைத் தானே விலக்குவது போன்றது.

மேற்கூறிய மோசமான மசோதாவின்படி செயல்பட்டால், சீனாவுடன் மட்டுமல்ல, அமெரிக்கா உலகுடனும் வாய்ப்பு மற்றும் எதிர்காலத்துடனும் தொடர்பைத் துண்டித்து, தனக்குத் தானே தடை விதித்துக் கொள்கிறது.