கால வளர்ச்சி போக்கைக் உணர்ந்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்-ஷி ச்சின்பிங்
2022-06-23 14:20:58

ஜுன் 22ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், காணொளி வழியாக பிரிக்ஸ் வணிக மன்றத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு, கால வளர்ச்சி போக்கைக் உணர்ந்து, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

முதலில், நாம் ஒருங்கிணைத்து, உலக மற்றும் பிரதேச அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் ஒன்றுக்கு ஒன்று உதவி அளித்து, உலக தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்.

மூன்றாவதாக, ஒன்றை ஒன்று வென்றடக்குமாறு ஊக்கமளித்து, கூட்டு நலனை பெற வேண்டும்.

நான்காவதாக, ஒன்றுக்கு ஒன்று சகிப்புத் தன்மையுடன், திறப்பு பணியை விரிவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

புதிய சந்தை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்குமிடையிலான முக்கிய ஒத்துழைப்பு மேடை, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறையாகும். தற்போது, பிரிக்ஸ் ஒத்துழைப்பு, உயர் தர வளர்ச்சி கட்டத்தில் நுழைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் வணிக மன்றம் ஜுன் 22ஆம் நாள், இணைய வழியிலும் நேரடி வழியிலும் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தென்னாபிரிக்க அரசுத் தலைவர் லாமாஃபோசா, பிரேசில் அரசுத் தலைவர் போசோனலோ, ரஷிய அரசுத் தலைவர் பூத்தின், இந்திய தலைமை அமைச்சர் மோடி ஆகியோர் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.