அமெரிக்கா ஜனநாயக நாடு அல்ல:கருத்து கணிப்பின் முடிவு
2022-06-23 18:55:37

அமெரிக்காவின் சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, எதிர்காலத்தில் அமெரிக்கா ஜனநாயக நாடாக இருக்காது என கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 49 விழுகாட்டினர் கருதுகின்றனர். அமெரிக்காவின் தார்மீக மதிப்பு மோசமானது என 50 விழுக்காட்டினர் கருதுகின்றனர். மேலும், ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் அமெரிக்கா தான் என்று உலகளவில் 44 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இது பற்றி கூறுகையில், அமெரிக்க அரசியல்வாதிகள் உள்நாட்டில் ஜனநாயகத்தை தனிநபர் மற்றும் கட்சி நலன்களை நாடும் கருவியாகவும், வெளிநாடுகளில் ஜனநாயகத்தை அமெரிக்காவின் நலனைப் பேணிக்காக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தி வருவது, அமெரிக்க ஜனநாயகம் பெருமளவில் சந்தேகம் மற்றும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டதற்கான அடிப்படை காரணமாகும் என்று தெரிவித்தார்.