சீனாவுக்கான இந்திய மற்றும் தென்கொரியத் தூதர்களுடன் வாங்யீ சந்திப்பு
2022-06-24 17:04:42

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுன் 22ஆம் நாள், பதவியை விட்டு நாட்டுக்குத் திரும்பவுள்ள இந்திய தூதர் பிரதீப் குமார், தென்கொரிய தூதர் ஹாசுங் ஜாங் ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.

இந்திய தூதர் ப்ரடீப் குமாரைச் சந்தித்த போது வாங்யீ கூறுகையில், சீனாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று நோக்கி நடந்து, இரு தரப்புறவைத் தொடர்ந்து மேம்படுத்தி, சுமுகமான வளர்ச்சி பாதைக்கு கூடிய விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். பிரதீப் குமார் கூறுகையில், சீனாவுடன் இணைந்து தொடர்பை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, இரு தரப்பின் ஒத்துழைப்பு மேலும் சீரான திசைக்கு வளர்வதை முன்னெடுக்க இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ஹாசுங் ஜாங்கைச் சந்தித்த போது வாங்யீ கூறுகையில், சீனாவும் தென்கொரியாவும், தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 30ஆம் ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டின் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவைப் புதிய நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.