ஏகபோகவணிக எதிர்ப்புக்கான புதிய சட்டம்
2022-06-24 11:36:43

ஏகபோகவணிக எதிர்ப்புக்கான சட்டத்தைத் திருத்தும் தீர்மானம், ஜுன் 24ஆம் நாள் நடைபெற்ற 13வது சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 35வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய சட்டம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் நாள் நடைமுறைக்கு வரத் துவங்கும். நேர்மையான போட்டிக்கான பரிசீலனை அமைப்புமுறையைச் சீனா முழுமைப்படுத்தி, சோஷலிச சந்தை பொருளாதாரத்துக்குப் பொருந்திய போட்டி விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்துகிறது. அத்துடன், சீன அரசவையைச் சேர்ந்த ஏகபோகவணிக எதிர்ப்புப் பணியகம், தொடர்புடைய சட்ட அமலாக்கப் பணிக்குப் பொறுப்பேற்று, ஒன்றிணைப்பு, திறப்பு, போட்டி, ஒழுங்கு ஆகியவற்றைக் கொண்ட சந்தை அமைப்புமுறையை மேம்படுத்துகிறது.