ஆப்கானிஸ்தானுக்குச் சீனா வழங்கிய மனித நேய உதவிகள்
2022-06-24 17:41:27

ஆப்கானிஸ்தானின் தேவைகளுக்கு ஏற்ப அவசர மனித நேய உதவிகளை வழங்க சீனா விரும்புகின்றது. மேலும், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்துக்குப் பிந்தைய நிவாரணப் பணிக்காக சீனா அந்நாட்டுக்குக் கூடுதலான அவசர மனித நேய உதவியை வழங்க உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்பு ஆப்கானிஸ்தானுக்குச் சீனா உதவியாக வழங்கிய தானியங்கள், ஆப்கானிஸ்தானைச் சென்றடைந்து தற்போது விநியோகிக்கப்படுகிறது.