சின்ச்சியாங் மனித உரிமைக்கான பரப்புரை கூட்டம்
2022-06-24 18:44:12

ஜெனிவாவுக்கான சீனப் பிரதிநிதி குழுவும், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசும், 23ஆம் நாள் மக்களின் இன்ப வாழ்வு மிக உயர்ந்த மனித உரிமை என்ற தலைப்பில் சின்ச்சியாங் தொடர்பான காணொளி பரப்புரை கூட்டத்தை நடத்தியுள்ளன. ஜெனிவாவிலுள்ள 30 நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகள், உயர்நிலை அதிகாரிகள், ஐ.நா மனித உரிமைக்கான சிறப்பு அலுவலர்கள் உட்பட சுமார் 60 பேர் இக்கூட்டதில் பங்கெடுத்தனர்.

பல்வேறு இன மக்களுக்கும் இன்ப வாழ்வை ஏற்படுத்தும் விதமாக, சின்ச்சியாங்கில் செயலாக்கப்பட்ட திட்டவட்டமான நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.