ஆப்கானுக்கு ஆதரவு பற்றிய சீனாவின் வேண்டுகோள்
2022-06-24 09:52:55

ஐ.நா பாதுகாப்பவையின் ஆப்கான் விவகாரத்துக்கான வெளிப்படை கூட்டத்தில் ஐ.நாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ஜுன் உரை நிகழ்த்திய போது, ஆப்கானுக்குச் சர்வதேசச் சமூகம் மேலதிக ஆதரவுகள் மற்றும் உதவிகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், அவர் சில ஆலோசனைகளை வழங்கினார். முதலாவதாக, ஆக்கபூர்வமான தொடர்பை வலுப்படுத்தி, சுய நிர்ணயம் கொண்ட பயன்தரும் நாட்டின் மேலாண்மையை ஆப்கான் மேற்கொள்வதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இரண்டாவதாக, மூலவளங்களின் ஒதுக்கீட்டை அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார இன்னல்களை ஆப்கான் தீர்ப்பதற்கு உதவியளிக்க வேண்டும். மூன்றாவதாக, பன்முகங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீரான வளர்ச்சியை ஆப்கான் நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.