அதிக சாதனைகளைப் பெற்ற பிரிக்ஸ் ஒத்துழைப்பு
2022-06-24 19:54:41

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாளிரவு காணொளி வழியாக, 14ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குத் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார். பிரிக்ஸ் நாடுகள் நெருக்கமாக ஒன்றுபட்டு, தங்கள் பலத்தை ஒன்றிணைத்து, ஒன்றாக எதிர்காலத்தை நோக்கிச் செல்லுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். பிரிக்ஸ் அமைப்பு முறை மிக முக்கியமானது என்று வாஷிங்டன் சிந்தனைக் கிடங்கின் வில்சன் மையத்தின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத் தொகை, 2006ஆம் ஆண்டை விட 300 விழுக்காடு அதிகம். இது, உலகப் பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார அதிகரிப்புக்கு வழிகாட்டும் இயந்திரமாக மாறியுள்ளது.

உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் முன்மொழிவு மிக முக்கியமானது. குறிப்பாக, நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த முன்மொழிவைக் கவனமாகக் கேட்க வேண்டும் என்று சாம்பியாவின் பசுமைக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு முதல் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பைப் பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்துவதற்கான முன்மொழிவு, வர்த்தக முதலீடு மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கான முன்மொழிவு ஆகியவற்றைச் சீனா முன்வைத்தது. மேலும், சீனா முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு, பிரிக்ஸ் நாடுகளுக்குத் துணை புரிகின்றது என்று இந்தியாவின் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பி.ஆர்.தீபக் தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாடு, பிரிக்ஸ் ஒத்துழைப்பை உயர் மட்டத்துக்கு முன்னேற்றி, உலக மேலாண்மைக்கு மேலதிக பிரிக்ஸ் ஆற்றலை ஊட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.