வங்காளத் தேசத்தில் வெள்ளத்தால் 68பேர் உயிரிழப்பு
2022-06-24 09:23:05

மே 17முதல் ஜூன் 23ஆம் நாள் வரை வங்காளத் தேசத்தில் நீடித்த வெள்ளத் தாக்குதலில் 68பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் பெரும்பாலான குடியிருப்பிடங்கள், வேளாண் பொருட்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தால் பெரிதும் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

சுமார் 2000 மீட்புப் படைகள் அந்நாட்டின் 64 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு மீட்புதவிப் பொருட்களை வழங்க முயற்சி செய்கின்றன என்று வங்காளத் தேசத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.