அரசுத் தலைவர் உத்தரவுகளில் ஷிச்சின்பிங் கையொப்பம்
2022-06-24 20:16:26

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 24ஆம் நாள் அரசுத் தலைவர் உத்தரவுகள் சிலவற்றில் கையொப்பமிட்டார்.

அவற்றில் 114ஆவது உத்தரவின்படி, சீன மக்கள் குடியரசின் விளையாட்டுச் சட்டத்தின் திருத்தம் 24ஆவது நாள் 13ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 35ஆவது கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது, அடுத்த ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் அமலுக்கு வரும்.

115ஆவது உத்தரவின்படி, சீன மக்கள் குடியரசின் கருப்பு நிலம் பாதுகாப்பு சட்டம் ஒரே கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது இவ்வாண்டின் ஆக்ஸ்டு திங்கள் முதல் அமலாக்கப்பட உள்ளது.