© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் ஆவணத் திரைப்பட அலைவரிசையும், குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா வானொலி அலைவரிசையும் ஹாங்காங்கில் ஒலி-ஒளிபரப்பு சேவை துவக்க விழா ஜுன் 24ஆம் நாள் பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கில் நடைபெற்றது. தாய்நாட்டுடன் ஹாங்காங் இணைந்துள்ள 25ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஹாங்காங் மக்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பாக, இவ்விரு அலைவரிசைகளின் சேவை ஜுலை முதல் நாள் ஹாங்காங்கில் தொடங்க உள்ளது.
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி கேரி லாம் துவக்க விழாவின் போது காணொளி வழியாக நிகழ்த்திய உரையில், ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கை, யோசனையிலிருந்து நடைமுறையாக்கம் வரை அதிகரித்து வரும் உயிராற்றலை வெளிக்காட்டியுள்ளது. ஹாங்காங்கில் வழங்கப்படும் அலைவரிசைகள் மூலம், நாட்டின் புதிய வளர்ச்சி பற்றி ஹாங்காங் மக்கள் மேலதிக வழிகளில் அறிந்து கொண்டு, குடிமக்கள் மற்றும் தேசிய அடையாளத்தை அவர்கள் ஒப்பு கொள்ளும் உணர்வு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியோங் உரை நிகழ்த்துகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் ஹாங்காங் மக்கள் பற்றி கவனம் செலுத்தி, ஹாங்காங்கின் நிலையான அமைதி மற்றும் செழுமை மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார். சீன ஊடகக் குழுமம் தொடர்ந்து புத்துணர்வு தரும் ஒருங்கிணைந்த ஒலி மற்றும் ஒளிபரப்பில் ஈடுபட்டு, ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையின் சீரான நடைமுறையாக்கத்துக்கு வலுவான இயக்காற்றலை வழங்கும் என்று தெரிவித்தார்.