பிரிக்ஸ் ஒத்துழைப்பை முன்னேற்றி வரும் சீனா
2022-06-24 17:45:06

ஜுன் 23ஆம் நாளிரவு நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். இது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 24ஆம் நாள் பதிலளிக்கையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரை, பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சிக்குத் தெளிவான திசையைக் காட்டி, இக்கூட்டத்தில் பங்கெடுத்த தலைவர்களின் வெகுவான பாராட்டையும் ஆக்கப்பூர்வ மறுமொழியையும் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

இவ்வுச்சி மாநாட்டுக்கும் பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கும் சீனா மேற்கொண்ட முயற்சிகளை பல்வேறு தரப்புகள் பாராட்டியதோடு நன்றி தெரிவித்துள்ளன. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில், இவ்வாண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் பதவியில் வகிக்கும் சீனா, பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் செல்வாக்கை மேம்படுத்துவதற்கும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் என்று வாங் வென்பின் தெரிவித்தார்.

மேலும், இன்று நடைபெற உள்ள உலக வளர்ச்சிக்கான உயர்நிலை பேச்சுவார்த்தைக்கு அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமை தாங்க உள்ளார் என்று அவர் கூறினார்.