அமெரிக்காவில் கடுமையான குரங்கம்மை பாதிப்பு
2022-06-24 16:13:09

23ஆம் நாள் வரை, அமெரிக்காவிலுள்ள 25 மாநிலங்களில் 173 குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்தது. தென் ஆப்பிரிக்காவிலும் பல்கேரியாவிலும் முதல்முறையாக குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

குரங்கம்மை நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்க அரசு அண்மையில் குரங்கம்மை நோய் பரிசோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அனைத்து அமெரிக்கர்களும் இந்த நோய்க்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கச் சுகாதார மற்றும் மனிதச் சேவை அமைச்சர் தெரிவித்தார்.