அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை: உச்ச நீதிமன்றம்
2022-06-25 16:30:18

கருக்கலைப்புக்கு தடை விதித்து அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் 24ஆம் நாள் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் கிடைக்காது.

அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்பு சட்டப்படி செல்லும் என கடந்த 1973ஆம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருந்து வருகிறது. ஆனால், கருக்கலைப்புக்கு எதிராக ஈடுபட்டு வரும் நபர்களும் குழுக்களும் இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றே கோரிக்கை எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.