ஆப்கானிஸ்தானுக்கு சீன வெளியுறவு அமைச்சரின் ஆறுதல் செய்தி
2022-06-25 19:18:42

ஆப்கானிஸ்தான் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுன் 24ஆம் நாள் ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசின் வெளியுறவு அமைச்சர் முட்டாகிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

வாங்யீ கூறுகையில், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் நிலநடுக்கத்தால், கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்குஇரங்கல் தெரிவிப்பதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்கின்றேன் என்றார்.

மேலும், ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையும் உற்பத்தியும் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பும் என்று நம்புகின்றோம். அதேவேளையில், ஆப்கானிஸ்தானின் தேவைக்கு இணங்க, இயன்ற அளவில் அவசர மனித நேய உதவியை வழங்க சீனா விரும்புகின்றது என்றும் தெரிவித்தார்.