அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் கடுமையான அபாயம் : ஐ.எம்.எஃப்
2022-06-25 16:35:22

அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதற்கான வழி குறுகியதாக மாறி வருகிறது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் கடுமையான அபாயத்தை எதிர்கொண்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா 24ஆம் நாள் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பு, ஏப்ரலில் இருந்த 3.7 விழுக்காட்டில் இருந்து தற்போது 2.9 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம், 2.3 விழுக்காட்டில் இருந்து, 1.7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கான வழி குறுகியதாக மாறி வருகிறது. தற்போதை நிலையிலுள்ள உறுதியற்ற தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜார்ஜீவா கூறினார்.

அமெரிக்க அரசாங்கம், கடந்த 5 ஆண்டுகளாக வர்த்தகக் கூட்டாளிகள் மீது வசூலித்து வரும் கூடுதலான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை தெரிவித்துள்ளது.