வளர்ச்சி மூலம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறோம்
2022-06-25 20:01:50

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாளிரவு காணொளி வழியாக உலக வளர்ச்சிக்கான உயர்நிலை பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.

உரையின் தொடக்கத்தில் , 1960களில் சீனாவின் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயியாகப் வேலைசெய்து வந்த அனுபவத்தை ஷிச்சின்பிங் பகிர்ந்து கொண்டார். இடைவிடாமல் வளர்ந்தால் தான், நல்ல வாழ்க்கை மற்றும் நிலைப்புத்தன்மை வாய்ந்த சமூகம் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று அவர் கூறினார்.

வளர்ச்சி என்பது இவ்வாண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கருப்பொருள் ஆகும். கடந்த செப்டம்பர் ஐ.நா. பொதுப் பேரவையில் உலக வளர்ச்சி பற்றிய முன்மொழிவை முன்வைத்த ஷிச்சின்பிங், சர்வதேச சமூகம் வளர்ச்சி மீது கவனத்தை குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உலக வளர்ச்சிக்கான உயர்நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் இந்த முன்மொழிவு அமலுக்கு வந்துள்ளது.

வளர்ச்சியை முன்னெடுப்பதில், சீனாவின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கிறது. இப்பேச்சுவார்த்தையில், உலக வளர்ச்சி முன்மொழிவை  நடைமுறையில் வைக்கும் விதமாக, சீன தரப்பின் முக்கிய நடவடிக்கைகளை ஷிச்சின்பிங் அறிவித்தார். உலக வளர்ச்சி மற்றும் தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான நிதியத்தை உருவாக்குதல், உலக வளர்ச்சிக்கான அறிவுசார் வலையமைப்பை உருவாக்குதல் உள்பட நடவடிக்கைகள் அடக்கம். மேலும், வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, வைரஸ் தடுப்பு மற்றும் தடுப்பூசி உள்பட 8 துறைகளிலான 32 அம்ச நடவடிக்கைகள் இப்பேச்சுவார்த்தையில் வெளியிடப்பட்டுள்ளன.