ஆப்கானுக்கு உதவிப் பொருட்கள் கொடுத்த இந்தியா
2022-06-25 16:17:21

இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு நன்கொடையாக கொடுத்த முதலாவது தொகுதி மனித நேய உதவிப் பொருட்கள் ஜுன் 23ஆம் நாளிரவில் காபூலைச் சென்றடைந்தன. கூடாரம், கம்பளம், உடை மற்றும் மருந்து உள்ளிட்ட 25 டன் எடையிலான பொருட்கள், நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பக்திகா மற்றும் ஹொஸ்ட் ஆகிய மாநிலங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட உள்ளன.

மேலும், பாகிஸ்தான் ஜுன் 24ஆம் நாள் ஆப்கானிஸ்தானுக்கு இரண்டாவது தொகுதி உதவிப் பொருட்களை அனுப்பியது. கூடாரம், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை, பாகிஸ்தான் விமானப்படையின் சி-130ரக விமானத்தில் அனுப்பப்பட்டன. ஜுன் 23ஆம் நாள் பாகிஸ்தான் வழங்கிய முதலாவது தொகுதி உதவிப் பொருட்கள் தரை வழியாக ஆப்கானுக்கு அனுப்பப்பட்டது.