உலக வளர்ச்சிக்கான உயர்நிலை பேச்சுவார்த்தையில் பன்னாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு
2022-06-25 16:40:22

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதின், தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ரமபோசா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் உலக வளர்ச்சிக்கான உயர்நிலை பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். புதிய யுகத்தில் உலக வளர்ச்சிக்கான கூட்டாளியுறவை உருவாக்கி 2030ஆம் ஆண்டு ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவது என்ற தலைப்பு குறித்து அவர்கள் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டு முக்கிய ஒருமித்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.