ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை மீண்டும் துவக்கம்
2022-06-26 16:09:50

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கையுடன் தொடர்புடைய தரப்புகள் அடுத்து வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கவுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியானும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெலும் 25ஆம் நாள் ஈரான் தலைநகரான தெஹரானில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தனர்.

ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பும் ஆழமாக விவாதித்து பேச்சுவார்த்தையின் தேக்க நிலையை அகற்றும் என்றும் இறுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்க்க, பல்வேறு தரப்புகளும் பேச்சுவார்த்தைக்கு வேகமாகத் திரும்ப வேண்டும் என்றும் அப்தோலியான் தெரிவித்தார்.