நுகர்வோர் பொருட்காட்சி ஜூலை 26ஆம் நாள் தொடக்கம்
2022-06-26 16:04:45

2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேச நுகர்வோர் பொருட்காட்சி ஜூலை 26முதல் 30ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. பொருட்காட்சி மற்றும் உலக நுகர்வுக் கருத்தரங்கின் துவக்க விழா 25ஆம் நாளிரவு நடைபெறவுள்ளது. 57 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 700 தொழில்நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கேற்க உள்ளன. காட்சிக்கு வைக்கப்படும் வணிகச் சின்னங்களின் மொத்த எண்ணிக்கை 1300க்கும் அதிகமாக இருக்கும்.

மேலும், இப்பொருட்காட்சி ஜூலை 26, 27, 28ஆகிய நாட்களில் தொழில்முறை பார்வையாளர்களுக்குத் திறக்கப்படும். 29, 30ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.