ஆப்கானிஸ்தானுக்கு 5கோடி யுவான் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வழங்கும் சீனா
2022-06-26 16:53:58

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 5கோடி யுவான் மதிப்புள்ள அவசர மனித நேய உதவிப் பொருட்களை வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. கூடாரங்கள், துண்டுகள், மடிப்பு படுக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென் பின் தெரிவித்தார்.

திட்டப்படி, முதலாவது தொகுதி பொருட்கள் 27ஆம் நாள் விமானத்தில் ஆப்கானுக்கு அனுப்பப்பட உள்ளன. அதையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் மக்கள் இந்த நிவாரணப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில், சீனத் தரப்பு ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.