ஆப்கானுக்கு சீன முதலீட்டுக் கூட்டு நிறுவனங்களின் உதவி
2022-06-27 16:03:04

ஆப்கானிஸ்தானிலுள்ள சீன முதலீட்டுக் கூட்டு நிறுவனங்கள் ஜுன் 26ஆம் நாள் அந்நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள கோஸ்ட் மாநிலத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின.

அரிசி, மாவு, சமையல் எண்ணெய், தேயிலை உள்ளிட்டவை முதலாவது தொகுதியான பொருட்களில் இடம்பெற்றுள்ளன. கோஸ்ட் மாநிலத்தின் சீற்ற மேலாண்மை மற்றும் மனித நேய விவகாரத்துக்கான பிரிவின் பொறுப்பாளர் முகமது நிகழ்த்திய உரையில் சீன முதலீட்டுக் கூட்டு நிறுவனங்களின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.