சீனா-கனாயா தூதாண்மை உறவு நிறுவிய 50 ஆண்டு நிறைவு
2022-06-27 17:48:27

சீனாவுக்கும் கயானாவுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டு, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், கடந்த 50 ஆண்டுகளில், இரு நாட்டு உறவு மாபெரும் வளர்ச்சி சாதனையை அடைந்துள்ளது. கயானா அரசுத் தலைவர் இர்ஃபான் அலியுடன் இணைந்து, 50ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, சீன மற்றும் கயானா உறவை புதிய கட்டத்துக்குக் கொண்டு சென்று, இரு நாட்டு மக்களுக்கும் நன்மையை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார்.

கயானா அரசுத் தலைவர் இர்ஃபான் அலி கூறுகையில், ஆங்கிலம் பேசும் கரீபியன் பிரதேசத்தில் சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய முதல் நாடு கயானா, ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நின்று வருகின்றது. கடந்த 50ஆண்டுகளில், இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவு காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது என்று தெரிவித்தார்.