ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு துவக்கம்
2022-06-27 10:48:56

உள்ளூர் நேரப்படி ஜுன் 26ஆம் நாள் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் துவங்கியது. ரஷிய-உக்ரைன் சூழ்நிலை நடப்பு உச்சி மாநாட்டின் முக்கிய அம்சமாகும். மேலும், காலநிலை பாதுகாப்பு, எரியாற்றல் நெருக்கடி உள்ளிட்டவை இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரிலில் வைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகளைத் தவிர, இந்தியா, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல், அர்ஜென்டீனா ஆகிய நாடுகளின் தலைவர்களும் அழைப்பின் பேரில் இவ்வுச்சி மாநாட்டில் பங்கெடுத்தனர். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் பார்வையாளர்களாக இம்மாநாட்டில் பங்கெடுத்தனர்.