மனித உரிமைகளுக்குக் கடும் தாக்கம் ஏற்படுத்திய கருக்கலைப்பு உரிமை நிறுத்தம்:ஐ.நா
2022-06-28 11:26:54

கருக்கலைப்பின் உரிமை நிறுத்தம் தொடர்பான தீர்ப்பு, அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது, பெண்களின் மனித உரிமை மற்றும் பாலியல் சமத்துவத்துக்குப் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என்று ஐ.நா மனித உரிமை விவகாரத்துக்கான பொறுப்பாளர் மிஷேல் பாச்லெட் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகையில், இலட்சக்கணக்கான அமெரிக்க பெண்களின் தற்சார்ப்பு உரிமை இத்தீர்ப்பினால் பறிக்கப்படும். குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் மற்றும் சிறுப்பான்மையினரைச் சேர்ந்த பெண்களின் அடிப்படை உரிமைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்று கண்டனம் தெரிவித்தார்.

இத்தீர்ப்பின் பின்விளைவைத் தணிக்கும் விதமாக, அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.