அமெரிக்காவின் சரக்கு வாகனத்தில் குடியேறியவர்களில் 46பேர் உயிரிழப்பு
2022-06-28 19:08:09

அமெரிக்க செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவிலுள்ள ஒரு சரக்கு வானத்தின் பெட்டியில்குடியேறியவர்களில் 46பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டதாக அந்நாட்டுக் காவற்துறையினர் 27ஆம் நாள் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகக் கடுமையான குடியேறியவர்களின் உயிரிழப்பு சம்பவம் இது என்று உள்ளூர் அதிகாரி கூறினார்.

ஜூன் மாதம் முதல், டெக்சாஸ் மாநிலம் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, 27ஆம் நாள் அன்டோனியோவில் வெப்பநிலை அதிகப்பட்சம் 38திகிரி செல்சியஸை எட்டியது. மக்கள் கூட்டமாகச் செல்லும் வாகனத்தில் வெப்பநிலை மேலும் அதிகமாக இருக்கும்.